நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015 ரகு

சீர்மிகுந் தேகுந் தமிழ்நாட்டில்
சிறப்புறத் தழைப்பர் தமிழர்
ஏர்பிடிக் குங்கைக ளெல்லாம்
ஏற்றமுறக் கிழக்குஞ் சுடரும்

வரலாற்று ஏடுகள் மீண்டும்
வல்லியத் தமிழில் தோன்றும்
புறவழிப் புகுந்த பிறமொழிப்
பின்நின்று தமிழை வியக்கும்

எழுச்சிக் கனவுகள் கொண்ட
இளைஞர் பெருகுவர் நாளைய
வளர்ச்சிக் கணினியில் அதிலும்
வரலாறு படைக்க முனைவர்

சிற்றினம் பேரினம் நீங்கி
சிந்தையிற் சமத்துவம் ஓங்கும்
வெற்றிட விளைநிலம் யாவும்
விளைந்தே மாநிலஞ் செழிக்கும்

வெளிநாட்டுக் கனவுகள் பொய்த்தே
வேலையி லிங்கும் திறம்பட்டு
வலிமையாய் வறுமை போக்கி
வளம்பெருஞ் சமுதாயங் கொள்வர்

செம்மொழி பேச யாவரும்
சிரத்தை எடுப்பர்; நாளை
எம்மதம் என்றொருக் கேள்வி
எதற்கெனுந் தமிழரேப் பிறப்பர்!
--------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது என
உறுதியளிக்கிறேன்
விலாசம்:அ.ரகு சுஜய் டிஜிடல்ஸ்
374,அவினாசி ரோடு பெரியார்காலனி
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா
அலைபேசி: 91 83447-34304

எழுதியவர் : அ.ரகு (4-Jan-15, 6:32 pm)
பார்வை : 217

மேலே