வயோதிகம்

வயோதிகம்!
........வாழ்ந்ததின் எச்சம்!
.............வருத்தங்களின் மிச்சம்!
.........................வலிகளின் சொச்சம்!
ஆழ்ந்த மூச்சும் அமைதி பேச்சும் அனுபவமாய்!
ஆசை அடங்கி ஒடுங்கி வாழும் நிம்மதியாய்!
சந்ததிகளின் சுதந்திர சங்கடமாய்!
சக வாழ்வின் சன்யாச சந்தர்ப்பமாய்!
சாக நடை பிணங்கள்!
சமூகத்தின் கடை இனங்கள்!

எழுதியவர் : கானல் நீர் (4-Jan-15, 7:34 pm)
பார்வை : 439

மேலே