இப்படி நாம் காதலிப்போம் -பொங்கல் போட்டி கவிதை 2015

நாம் பிறந்த மண்ணு தாய் போலடா
பிறந்தபின்னே மறு பிறவி அறிந்ததாரடா !
இருந்த பூமி வறண்டு கிடக்க
நாம் அறிந்த படிப்பு வீண்தானடா!

பறந்து பறந்து பல மொழியில் பயிலுவோம்
இருண்ட மனதில் அறிவியல் புதையலாகுவோம் !
விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்று நம்மண்ணில் வந்து உழுவோம் !
வேளாண்மையில் வளர்ச்சி கண்டு இவ்வுலகம் வியக்க வாழுவோம் !

மாரி பொழியா மண்ணிலும்
மாற்றம் காண முயலுவோம்!
பிறந்த பூமி சிறந்து விளங்க
உறுதிகொண்டு உழைப்போம்!!

தமிழன் என்ற உணர்வு பொங்க
தை பொங்கலிட்டு மகிழுவோம்!
தரணியெங்கும் பசுமை கண்டு
பஞ்சமென்பதை விரட்டுவோம் !

அஞ்சுபத்துக்கு பஞ்சாய் பறப்பவர் நெஞ்சம்
கொஞ்சி மகிழ விந்தை செய்து
வேளாண்மையை வளர்ப்போம் !
வெள்ளைக்காரனை கெஞ்சவைத்து நாம் மகிழ்வோம்!

பெற்றஅன்னை உள்ளம் மகிழ
உள்ளூரில் பிழைப்பை அமைத்து
எல்லோர்க்கும் பணி கொடுப்போம்!
பிணி இல்லா பெருமை பெற கிராமம்தனை செழிப்பாக்குவோம் !

எழுதியவர் : கனகரத்தினம் (5-Jan-15, 1:24 am)
பார்வை : 78

மேலே