நாளைய தமிழும் தமிழரும் -பொங்கல் கவிதை போட்டி 2015

அகர முதல எழுத்தான தமிழன்
அதள பாதாள இருட்டாகினான் !
முரண்டு பிடிக்கும் காளைகளை
விரைந்து அடக்கி வீரனான தமிழன் !

இருந்த மண்ணில் இரக்கம் காட்டி
இருந்த இடத்தை இழந்து தவிக்கிறான்!
வருந்த தெரிந்த மனித தமிழன்
பிறர்க்கு விருந்தாகினான் மறத்தமிழன்!

வில்லும் வாளும் அருங்காட்சியில்
விட்டுவைத்த வீரமங்கு விழிக்கும் நேரமிப்போ !
விழிக்கும் கண்ணில் கொதிக்கும் உதிரம்
வழிகள் காட்டும் நாளை விடியல் தோன்றும் !

கொடுத்து கொடுத்து சிவந்த கைகள்
எடுக்கும் வாளை பறிக்கும் இழந்த மண்ணை
எதிர்க்கும் உயிரின் உதிரம் தெறிக்கும்
இழந்து இழந்து இரும்பாகும் மனது !

கிழக்கே உதிக்கும் ஆதவன்
கீழ் நோக்கும் முன்னே
கிரீடம் சூடுவாள் தமிழ் பெண்ணே !
முறத்தால் புலியடித்தால் மறக்குல பெண் !

முட்டி முளைக்குது ஜீன்கள்
முழுது பெரும் நாளைய வான்
திரும்பிய திசையெங்கும்
தமிழர் தம் புகழ் ஓங்கும் !!

எழுதியவர் : கனகரத்தினம் (5-Jan-15, 2:12 am)
பார்வை : 96

மேலே