சாதி ஒழி மதம் அழி சாதி --பொங்கல் கவிதைப்போட்டி 2015

சாதி ஒழி! மதம் அழி! சாதி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாற்றமெடுக்கும் சாதி மத சாயம் பூசி
நாய்கள் ஆடும் நாகரிக ஆட்டத்தில்
நாசமாகிறது சொற்ப மனிதமும்!

சாதி மத போதை தலைக்கேறி
தருதலையாய் திரியாதே!
நீ மிருகத்தின் எச்சம்
என்றும் மறவாதே!

குருதி ஊற்றி சாதியை வளர்த்து
குருட்டு நம்பிக்கையில்
தீண்டாமையும் உள்புகுத்தி

மதியிழந்த மக்களாய்
மலத்தை அள்ளி திணித்தது
சக மனிதனின் வாயில்

நூற்றாண்டுகள் பல கடந்தும்
இன்றும் தொடர்கிறது
நவீன தீண்டாமை
சாதிப் பெயர் சொல்லி
இதுவே நம் உயிர் கொல்லி!

சாதி ஒழி!
அதுவே நீ உயர பெரும் வழி!
மதம் அழி!
அதுவே நீ ஒளிர ஒரே வழி!

எழுதியவர் : கோபி (5-Jan-15, 12:07 pm)
பார்வை : 625

மேலே