சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015
சாதி ஒழி மதம் அழி சாதி (பொங்கல் கவிதை போட்டி 2015)
உயர்வுமில்லை தாழ்வுமில்லை
நம் உடம்பில் ஓடும் குருதியிலே!
சாதியில்லை பேதமில்லை
நாம் உண்ணும் உணவினிலே!
பறவைகளும் விலங்குகளும்
பார்ப்பதில்லை பேதமை!
மனிதரான நமக்குள் மட்டும் ஏன்
இந்த வேற்றுமை!
சாதியால் பிரித்து வைக்கின்றோம்
சக மனிதன் அவன் என்பதை
மறக்கின்றோம்
ஒன்றே குலமாகி
ஒருவனே தேவனாகி
நாமும் இங்கே வாழ்ந்திட்டால்
சாதி, மதம் என்று ஏதும் இல்லை
சண்டை என்ற வார்த்தையில்லை
சாதிகளை நாம் துறப்போம்
மதங்களையும் தான் மறப்போம்
மனிதம் என்ற பாதையிலே
வீறு கொண்டு நாம் நடப்போம்!...
படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.
பெயர்: ரா. விவேக் ஆனந்த்
வயது: 24
வசிப்பிடம்: ஜி2, 403/9, 16வது மெயின், 13வது குறுக்குத்தெரு, வெங்கடேஸ்வரா அமைப்பு, பிடிஎம் 1வது நிலை, பெங்களூர்.
மாவட்டம்-560 068, கர்நாடகா.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: +91 9916080613