பிரபஞ்சத்தின் பஞ்சங்கள்
நிலவறை தோன்றும் நீலவானம்
புலவரை போற்றும் புதிய கீதம்
நடுவினில் நிலவு ஞாபக படகு
நட்சத்திரம் யாரெனும் போட்டி...!
நாழிகை நகர்ந்து மணிகளாக
மணிகளும் நகர்ந்து நாட்களாக
நாட்களும் நகர்ந்து மாதமாக
மாதங்கள் நகர்ந்து வருடமாக
வருடங்களை நகர்த்தி சுழல்கிறது பூமி !
சமதளப்பரப்பில் சாய்ந்தோய் வெடுக்கும் புற்கள்
புற்கள் போர்த்திய மலை சரிவுகள்
பூத்துக் குலுங்கும் மலர்கள்
மகரந்த சேர்க்கை நடந்தேற
லஞ்சம் கொடுத்திடும் வண்டுக்கு
இதழில் சொறியும் தேன்துளிகள் !
உயரத்தில் குளுமையும்
உள்ளுக்கும் வெதுமையும்
இடையிடையே இதமாய்
இடைவெளி விடுகிறது மூச்சு காற்று !
சிலநேரம் காமபசிக்கு
மேகம் வந்து பூமியை நுகரும்!
சில நேரம் கோரப்பசிக்கு
பூமியே தன் வாயை திறவும்...!
அளவுகடந்த பாசத்தால்
அவ்வப்போது அலைகள் வந்து மோதும்
மாசு படலம் மிகுதியாகி
ஓசோன் படலம் உடையும்
உள்ளிருந்து ஞாயிறு தணலாய் எரியும்
புழுக்கமிகுதி தாங்காது நீரும்
பூமிக்கடியில் ஒழியும் !
நீருமற்ற நிலத்திலெல்லாம்
வாழும் இயற்கை உயிரும் மடியும்....!
இதுவும் சுழற்சியென்று இதயங்களுக்கு புரியும்
இருந்தும் ஏனோ பிறர்க்கு இன்பம் தர முரணாகும்!