காதலென்னும் மழைத்துளிகள் 555
என்னழகே...
உன்னோடு நடை போட்ட நேரம்
மழைத்துளிகளின் ஈரசுவாசம்...
இதயத்தின் உள்ளே
பூக்கள் பூத்தது...
நாம் ஒதுங்கி நின்ற
மரத்தின் இலைகள்...
அள்ளி இறைத்தது
நீர் துளிகளை...
நம் இருவருக்கும்
இருந்த இடைவெளியில்...
விழுந்துகொண்டே இருந்தது
பல நீர் துளிகள்...
உன் முகத்தில்
பனிதுளியாகிட எண்ணி...
சில துளிகள் மட்டும் உன்
முகத்தில் விழுந்து தெரித்தது...
எவ்வளவோ பேச எண்ணினோம்
வார்த்தைகளால்...
உலாவரும் பாதை எங்கும்
விழிகள் பேசிக்கொண்டு...
இதழ்களோ மெளனமாக...
நாம் மழையில்
நனைந்ததோ ஒருநாள்...
நித்தம் நனைந்து
கொண்டு இருக்கிறது...
உன் சிரிபெனும்
மழையில் என் இதயம்...
காதலென்னும் மழைத்துளிகளை
சேகரிக்கிறேன்...
நீத்தம் நித்தம்
உன் முத்தங்களை.....