சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”
கடவுளைப் பொதுவில் வைப்போம்!
அவர் கொள்கையை
உள்ளத்தில் வைப்போம்!
அன்பின் வழியே
அவரைத் தேடியே
அவர் அன்பில்
உறைந்திடுவோம்!
எல்லா மதமும் நம் மதமே!
எல்லா மொழியும் நம் மொழியே!
எல்லா உயிரும் நம் உயிரே!
என்பதை உணர்ந்திடுவோம்!
உயர்ந்தவன், தாழ்ந்தவன்
என்ற பேதமெல்லாம்
கடவுளுக்கு என்றும் இல்லை!
எந்த விலங்கும்
தன் இனத்தில் பேதம் பார்ப்பதில்லை!
இந்த பேதமெல்லாம்
நெஞ்சில் வளர்ந்து விட்டால்
மனிதனே! நீயும்
மனிதன் இல்லை!
தீண்டாமையைத் தீண்டாமல்
அன்பால் சமத்துவம் செய்தே!
வாழ்வை அன்பின் மொழியாக்குவோம்!
இந்த படைப்பு என்னுடைய சொந்தப் படைப்பு என உறுதி அளிக்கிறேன்.
பெயர்: வே. பூபதிராஜ்
வயது: 24
வதிவிடம்: 5-112, வா. பசுபதிபாளையம்,
வாங்கல் அஞ்சல்,
கரூர் மாவட்டம்.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: 97884 15642