எதிர்வீட்டு நடைவண்டி
பொங்கள் நாளை
மாட்டு கொம்பு சீவ
குரவனை வரசொல்லனும்
கரும்பு வாங்கி
வாசலில் நிறுத்தனும்
கோயில் குளத்தில்
ஊரவைத்த எடுத்து வந்து
வண்ணம் பூசனும்
சாயம்போட்ட
தட்டு மாலை வாங்கி
தண்டியத்தில் மாட்டியிருக்கு....
அதை
மாட்டுக்கு போட்டு
மஞ்சுவிரட்டனும் என
கொஞ்சம் மெழுகாமல்
இருக்கும் கொட்டாயில்
தட்டுமுட்டு சாமன் கிடக்கும்
இடத்தில்
கயித்துக்கட்டிலைப் போட்டு யோசித்தப்படி
படுத்துக்கிடந்தான்
அந்த வீட்டு குடும்பதலைவன்
செப்பு வளையல்
சேமித்த மயிர்
உடையாத பாட்டில்
அத்தனையும் சேர்த்து வைத்தப்படி
விற்க
வியாபாரியை வருகைக்காக
காத்திருந்தாள்
அந்த வீட்டு குடும்ப தலைவி
வீச்சாருவாள் வலைஞ்சிடிச்சி
வீட்டு எண் மறஞ்சிடிச்சி
குடும்ப அடையும்
வாக்காளர் அட்டையும் தாங்க
என்று
கோபமாய் சொல்லிவிட்டு
அவற்றை பத்திரபடுத்தினான்
அந்த வீட்டு
படிந்த பெரிய பையன்
மண் சுவற்றில்
வெள்ளையடிக்க போராடியப்படி
வெள்ளை அடித்தால்
மஞ்சள் நிறம் வருதே என
தலைசொறிந்தான்
அந்த வீட்டு இளையப்பையன்
அதற்க்கு
மண் சுவரில் அப்படிதான் வரும்
இரண்டு மூணு முறை அடி
வெள்ளையா வரும் என
சொல்லிவிட்டு போனான்
அவர்கள் எதிர்வீட்டுக்காரன்
அவன்
அவர்கள் வீட்டு பொங்கள் வைத்து
பொங்களே.... சொல்லும் போதும்
மஞ்சிவிரட்டும் போதும் மகிழ்ச்சியாய்
கூட இருந்துவிட்டு
கரிகொழப்புக்காக
சாராயம் குடித்துவிட்டு வந்து
தன் மனைவியின்
முடியைப்பிடித்து
"போடி மலடி" என்று
சொல்லி அடித்தான்
ஊர் கூடியிருக்க
அப்பாவீடு கிளம்பினாள்
அவன் மனைவி
அமைதியாய்
அவள் அருகில்
குத்தவைத்து அமர்ந்து
"போடி போ... நான் என்னப்பன்ன?
போனவாரத்திலிருந்து
பொங்களுக்கு சுத்தம் செய்ய
எறவானத்திலிருந்து இறங்கி
வழியில கிடக்கும்
எதிர் வீட்டு நடைவண்டி
என்ன
மிருகமாக்கிடிச்சி
அதான் கோபப்பட்டுட்ட என
வேதனையோடு
கூற...
அவன்
வேதனையும்
வலியும் தெரியாமல்
மீண்டும் எறாவனத்தில்
ஏறியக்கொண்டது நடைவண்டி...
அந்த நடைவண்டி
மீண்டும் அடுத்த பொங்களுக்கு
தரையிறங்க கூடும்...!.