மீண்டும் விடியும்

மீண்டும் விடியும்!!!

எதிர்பார்ப்பு, படபடப்பு
உயர் குருதி அழுத்தம்
நெஞ்சுக்குள் ஏதோ தவிப்பு
என் காதுகள் அதைக் கேட்க மட்டும்
பலதும் பத்தும் பலர் பேர் வாய்களில்
பலகீனம் முடிவுகளில்
சில வேளை நம்பிக்கையூட்டும்
கணப் பொளுதில் அது மறையும்
ஊடக சுதந்திரம்
உளத்தை ரணகலம் செய்கின்றன
எது மெய் எது பொய்
முகில் கூட்டம் மறைக்க
அறிய முடியா மறைவினில்
கிடப்பில் கிடக்கிறது
வானம் தௌிவு பெறும் மட்டும்

பல தடைகள் தாண்ட
முள்வேளிச் சுவர்கள்
தள்ளிச் செல்ல பல கீறல்கள்
வேதனை உடலில் பட்ட காயமல்ல
உளத்தில் பட்ட வடுக்கள்
நாளை விடியுமா
இல்லை விடியாமலே தொடருமா
ஔியாய் பல தெரிந்தாலும்
ஒழிந்திட வேண்டியது ஔிர்வது
சற்று வேதனை தருகிறது

எதிர்பார்ப்புக்கள் பல
நிறைவேறுமா முடிவில்
கனவுகள் ஆயிரம்
பலிக்குமா நாளை
பொய்யும் உண்மையும் கலந்ததால்
அனுமானிக்க முடியவில்லை
பிரித்தறிய நான் அண்ணப் பறவையல்ல
ஆம் அது பாலையும் நீரையும் பிரித்தறியுமாம்
பிரித்திடுமா அண்ணப் பறவை
இவர் வாழ விளைந்திடுமா
நின்று துயர் துடைத்திடுமா
சமூகத்தின் பிடிப்பாய் இருந்திடுமா?
கேள்விகள் பல
நாளை விடையாய் அமையும்

எழுதியவர் : ஜவ்ஹர் (7-Jan-15, 10:06 am)
Tanglish : meendum vidiyum
பார்வை : 146

மேலே