இப்படி நாம் காதலிப்போம் -பொங்கல் கவிதைபோட்டி 2015
விழிகள் நோக்கிய முதல் நொடியே
வீழ்ந்தோம் காதலில் மறுநொடியே...!
உள்ளத்தால் உணர்ந்திட்ட காதல்தனை
உரைத்ததில்லை யாருக்கும் உலகறிய...!
பார்ப்பவர் கண்களுக்கு நண்பர்களாய்
பழகியவர் எண்ணங்களுக்கு விருந்தினராய்...!
வெளியில் வேசங்கள் போட்டு நடமாட
உள்ளே பாசம் நின்றது தடுமாறி...!
உயர்குலம் என்பது உனக்குள்ளும்
உழவன் மகள் என்பது எனக்குள்ளும்...!
பெற்றவர் எதிர்ப்பார் என்பதினால்
புதைத்தே வாழ்ந்தோம் உணர்வுகளை...!
வெறுப்பு விசனம் வேற்றுமைகள்
வேண்டாம் என்பதால் - எங்களுக்குள்
விட்டுக்கொடுத்தலோடு புரிதலையும்
இணைத்துக்கொண்டோம் நம் காதலுடன்...!
நேரம் காலம் பாராது
காதல் வேளையிலும் வேலையினால்
வந்தது பிரிவு நமக்கிடையில்...!
பிரிந்ததால் மறைந்திடுமா உண்மைக்காதல்
உள்ளத்தில் வாழ்கின்ற ஊமைக்காதல்...!
வாழ்தலில் சேர்தல் இல்லை காதல்
ஆதலால்...
சாதல் மட்டும் நாம் காதலிப்போம் இப்படியே...!!!