நம்ம ஊரு திருச்சி தானுங்க

நம்ம ஊரு திருச்சி தானுங்க
இதற்கு நிகர் வேறு இல்லீங்க .
பிறந்த மண்ணின் வாசம் வீசுமுங்க .
கவி படைக்க ஆசை மிகுதுங்க .

காவிரி ஆறு பாயும் நகரமுங்க .
அந்த ஆத்த தாண்டி மனசு ஓடுதுங்க .
ஆத்த தாண்டி பாத்தா ஸ்ரீரங்கமுங்க .
ரெங்கன் புகழ் பாட ஏங்குது மனசுங்க .

இது நம்ம வாழும் பூமி தானுங்க
கரிகாலன் கல்லனையோ காதலர்க்கு கோவிலுங்க
பாசமிகு மாரியம்மன் ஆசிதரும் நகரமுங்க .
பக்தியோடு அகிலாண்டேஸ்வரியை வணங்குங்க .

மூன்று நதி பாயுமிடம் முக்கொம்புங்க .
அத பார்ப்பதுவே நமக்கு புதுத்தெம்புங்க.
சூதினை சுட்டெரிக்கும் வெக்காளி பாருங்க .
சூரனை வென்ற வயலுரானை துதிங்க .

திருச்சியின் அற்புதமோ மலைக்கோட்டையிங்க.
தீராத இன்பத்தை அது நமக்குத் தந்திடுங்க .
வளமையும் இளமையும் நிறைந்த ஊருங்க.
வானுயர வாழ்க்கையை சொல்லித் தருமுங்க .

பாசமும் நேசமும் இங்கு பாக்கலாமுங்க .
பயிரும் பண்பும் எங்க இரண்டு கண்ணுங்க .
நம்ம ஊரு திருச்சி தானுங்க ....
இதற்கு நிகர் வேறு இல்லீங்க .....!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Jan-15, 8:56 am)
பார்வை : 76

மேலே