கருணைக் கடவு
அர்த்தம் இல்லா சப்தங்கள்
அகம் கொல்லும்!
ஆணவ கோபத்தின் பலம் வெல்லும்!
அதிகார மமதை தம் மதி கெடுக்கும்
மாந்தராய் பிறந்ததின் பலன் மறுக்கும்!
அடியும் உதையும் ஆள் பலமா
அகங்கார சூழ்ச்சிகள் பின் புலமா
வாழும் காலத்தில் வஞ்சம் வேண்டா
அன்பை போற்ற பஞ்சம் வேண்டா
கருனண என்ற கடவு
மனிதனை கடத்தும் கடவுளாய்!!!