நாளைய தமிழும் , தமிழரும் தைப்பொங்கல் கவிதை போட்டி
முதற்குடியை கடைக்குடியாகிவிட்டது கலிகாலம் -
விதைநெல்லை விளைநெற்கள் பரிகாசம் செய்யும் நேரம்
அண்டங்களை ஆராய்ந்த தமிழ்
அடையாளம் தெரியாமல் போனது துரோகம் ...........
தமிழனை ஆண்டிட தமிழனை காணோம்
தமிழினை ஆண்டிட தமிழனை காணோம்
பிறமொழி மீதிலே போகுமோ மோகம்
தமிழ்மொழி மட்டுமே தனித்து ஏங்கும் ...........
புத்தக பைக்குள் முத்தமிழ் ஏட்டை
மூழ்கி தேடிட ஒற்றை இடமே
தமிழன் வாழும் தமிழ் திருநாட்டில்
தலைமை இடைத்தை தமிழுக்கு காணோம் ...........
உண்மை தமிழர் உலகில் குறைவே
உணர்வு தமிழர் உலகில் குறைவே
அந்நிய மொழியை அறவே வெறுப்போம்
அதன்வழி கல்வியை அறவே அறுப்போம் ........
மொழி என்பது முகவரி ஆகும்
மூச்சு போன்றே தமிழும் ஆகும்
தமிழ்மொழி அதனை தாயாய் பார்ப்போம்
தலை வணங்கி அவளை ஏற்போம் ............
தாய்தனை மறப்பவன் தமையன் இல்லை
தமிழை மறப்பவன் தமிழன் இல்லை
தமிழை எங்கும் செழிப்பாய் விதைப்போம்
தமிழன் இனத்தை என்றும் காப்போம் ..........
இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று உறுதி கூறுகிறேன் .
வினாயகமுருகன் . சு
வயது - 35
16 மாரியம்மன் கோவில் தெரு ,
கவுண்டன் பாளையம் ,
புதுச்சேரி -605009