சாதி ஒழி , மதம் அழி தைப்பொங்கல் கவிதை போட்டி
சமத்துவ உலகிலே சாதியும் மதமும்
சாக்கடையாகி போனது சாபம்
மனித நேயம் மங்கி போகும்
மனித இனமோ தினமும் சாகும் ............
சாதி . மதம் இரண்டு பேயும்
கூடு விட்டு கூடு பாயும்
மரணம் தன்னை மழையாய் தூறும்
உதிரம்தானே ஆறாய் ஓடும் .........
பொய்யும் புரட்டும் போதனையாகும்
பூமியெங்கும் போர்க்களமாகும்
மனிதமூளை குழம்பிபோகும் -
நாம் மனிதன் என்றே மறந்துபோகும் ........
குருட்டு கொள்கை ஓங்கி போகும்
கொலைகள் கூட புனிதம் ஆகும்
மதங்கள் வாழ மனிதம் சாகும்
உலகம் ஓர்நாள் மறித்து போகும் .........
வாழத்தானே பிறவி எடுத்தோம்
சாவைத்தேடும் வழியை தொடர்ந்தோம்
இனியும் ஏனோ இந்த நிலைமை
திருந்தி வாழ்தல் உந்தன் கடமை ........
உயிரை கொள்ளும் மார்க்கம் வேண்டாம்
உறவை தேடும் மார்க்கம் தேடு
சாதியை ஒழி , மதத்தை அழி-
சமத்துவ உலகிற்கு நீபோடு ஆரம்பசுழி .............
இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று உறுதி கூறுகிறேன் .
வினாயகமுருகன் . சு
வயது - 35
16 மாரியம்மன் கோவில் தெரு ,
கவுண்டன் பாளையம் ,
புதுச்சேரி -605009