இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைபோட்டி 2015

இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைபோட்டி 2015
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பெற்றவனைப் பெற்றபெரும் பேறைக்கொண்டு
கற்றவனைக் காப்பியத்தில் ராமன் என்பர்,
விற்றவனை மரந்தரித்த காவியந்தன்னில்
கொற்றவனாம் கோமகன்தன் சிறப்பைச் சொன்னார்.!!

பூமிதந்த பூமகளாம் பூங்கொடியாள் சீதை -
சாமிதந்த பழிசொல்லைத் தாங்காஓர் பேதை
நேமியவன் கைப்பற்றி வனமேகியக் கோதை
ப்ரேமியவள் மேனியெழில் கூறிடுமோ காதை!!!

மொந்தையிலே வீழ்ந்த நறுந்தேனைப் போல-
மந்தைநடு மாவினைப் போல்கன்னிகை கண்டான்
முந்தைகண்ட பெண்டிரைஇனி கருத்தினில் வேண்டான்
சந்தைநடுத் தேரினைப்போல் மரமாய் நின்றான்.!!

பஞ்சுநிகர் மேனியெழில் பகர்ந்திட பாரில்
கொஞ்சுதமிழ் மொழியிங்கு வார்தைகள் தேடும்
மஞ்செனவே மங்கையவள் மருங்கைக் கொண்டு
விஞ்சுமலர் மென்மைதனை ஒருங்கே பாடும்!!

விண்ணையொத்த தேகம்என நீலவொளிசிந்தும்
கண்ணைஉற்று நோக்கிடிலோ மனம்மயக்கம் கொள்ளும்
மண்ணைஆள பிறந்தவனின் உளம்இனித் துள்ளும்
பண்ணிசைக்கும் பாவிசைக்கும் சொல்லவொனா இன்பம்

மங்கையவள் மனம்கவர்ந்த வாழ்க்கைக் கொண்டாள்
கங்கையென பொங்கிவந்த மன்னன் கண்டாள்
கொங்கையது மண்ணில்பட வீழ்ந்தாள் நங்கை
இலங்கை வெல்இராமனிடம் பெற்றாள் பங்கை!!

இப்படி நாம் காதலிப்போம்!......





இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
பெயர் : முரளிதரன் - வயது : 44
முகவரி - #33/34, திண்டல் , ஈரோடு
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - 8220447222

எழுதியவர் : முரளிதரன் (8-Jan-15, 10:03 am)
பார்வை : 96

மேலே