செதில் கிழிந்த உணர்வு - இராஜ்குமார்

செதில் கிழிந்த உணர்வு
~~~~~~~~~~~~~~~~~~~~

காற்றில் பரவிய
கனவினை எரித்து
மிஞ்சிய நிறத்தை
செவ்வானில் தெளித்து

அசையாத அலகால்
சிறகினை சிதைத்து
பறக்கும் பறவையின்
செதில் கிழிந்த
சிரிப்பிலும் தெறிக்குதடி என்காதல் ..!

பாதம் மோதிய
பாதையின் விளிம்பில்
விரலொடிந்த நொடியில்

நகத்தையும் நகலெடுத்து
நகரும் என்னுடலின்
நசுங்கிய காயத்திலும்
அடிக்கடி அமிலமூற்றி
ஆனந்தம் அடையும் உந்தன்
நிழலேந்திய சாலையில் தவிழும்
கானல்நீரில் கருவாகிய
கடைசித் துளிக்குள் பிறக்குதடி என்காதல் ..

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (8-Jan-15, 9:58 am)
பார்வை : 118

மேலே