காதல் இஎது காதல்

..."" காதல் இ(எ)து காதல் ""...
காதல் வாழ்க !!! காதல் வாழ்க !!!
காதல் பல உண்டு அதில்
ஒன்றை தேர்ந்தெடுத்து
உங்கள் முன்னே வந்துநின்று
இந்த கவிதை வயலிலே
விதை விதைக்கவந்தேன் !!!
பொய்யான உண்மையிது
மெய்சுவைக்கும் ஈக்களாய்
பொய்சொல்லி திரிவதுண்டு
கருவாய் உருகாகி மனதில்
மெய்யோடு மெய்சேரும்
மேன்மையும் இங்குண்டு !!!
சோடிகள் சாடைகாட்டி
கேளிக்கை செய்தவாறு
சர்க்கரை பந்தலிலே
சந்தித்திடும் பறவைகள்
வெற்றி கிட்டாவிடின் !!!
பிறர் வேடிக்கைபார்க்க
பிணமாய் கிடப்பார்
அதனாலே எனக்கு
காதல் பிடித்த மட்டும்
காதலை பிடிக்கவில்லை !!!
கையேடு கைகோர்த்து
கடல்க்கரை ஓரமாய்
கதைகள் பேசி நடந்து
கொளுத்தும் வெயிலும்
குளிர்ந்த குடைபிடிக்கும் !!!
காற்றுகூட தூதுசெல்லும்
காத்திருப்பு இதமாகும்
தவறுகள் ரசிக்கப்படும்
மெளனங்களிலேயே
நேரங்கள் கரையும் !!!
விடியாத பொழுதுகளும்
உறங்காத இரவுகளும்
அந்தரத்தில் நடைபயில
தன்னிலை மறக்காத
காதலை உணர்ந்தவரே
வாழ்விலும் வென்றவர் !!!
காதல் வாழ்க !!! காதல் வாழ்க !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..