உன்னில் என்னை நனைத்து விடு

காத்திருந்தேன் உன்
கவிதைக்காக நான்
விழித்திருந்தேன்
உனக்காக நான்.

உன் எழுத்துக்கள்
மட்டுமே என்னை
படுக்கையில் இருந்து
எழுப்பியது.

காலை மலராய்
உன் கவிதை என்
கண்களில் பூத்து
மனதை நனைத்து..

கற்பனைகள் வளர்த்து
என்னை பாடாய் படுத்தி
வட்டம்மிட்டது என்னை
எப்போது என்னை உன்னில் நனைப்பாய்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (8-Jan-15, 10:30 am)
பார்வை : 61

மேலே