இப்படி நாம் காதலிப்போம் தைப்பொங்கல் கவிதை போட்டி

கற்கும் வயதில் கல்வி கற்று
கலையும் தொழிலும் பலவும் கற்று
உலக அறிவை அதிகம் பெற்று
அதற்கு பின்னே காதல் செய்வோம் ...........

கள்ளமில்லா உள்ளம் கொண்டு
காமம் இல்லா உறவு கொண்டு
புனிதமான அன்பை கொண்டு
புரிந்து செய்வோம் காதல் நாம் ............

ஏற்ற தாழ்வு எல்லாம் மறந்து
எல்லா உயிரையும் சமமாய் மத்தித்து
சாதி மதங்கள் மறுத்த உலகில்
சமத்துவம் புரிய காதல் செய்வோம் ..........

அன்பை பகிரும் இனிய உறவாய்
அன்னை தந்தை மகிழும் விதமாய்
உற்ற உறவுகள் போற்றும் வாழ்வை
வாழ நாமும் காதல் செய்வோம் .........

உண்மை வழியில் உழைத்து வாழ்ந்து
உயர்ந்த நிலைக்கு நாமும் உயர்ந்து
இயன்ற வரையில் ஈகை செய்து
இனிதே வாழ காதல் செய்வோம் .........

மனிதநேயம் மனதில் கொண்டு
மரணம் வெல்லும் அன்பை பகிர்ந்து
ஒழுக்கம் போற்றி உத்தம வழியில்
ஒன்றாய் வாழ காதம் செய்வோம் ..........


இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று உறுதி கூறுகிறேன் .

வினாயகமுருகன் . சு
வயது - 35
16 மாரியம்மன் கோவில் தெரு ,
கவுண்டன் பாளையம் ,
புதுச்சேரி -605009

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jan-15, 11:18 am)
பார்வை : 94

மேலே