சிக்காதவை

மக்கிய குப்பை..
மக்காத குப்பை..
என்று பிரித்த போது..
குப்பை தொட்டி
சிரித்தது..
இருப்பதெல்லாம்..
கையில்
சிக்கிய குப்பை மட்டுமே..
சிக்காத குப்பையை
மனங்களில் இருந்து
யாரும் இன்னும்
என்னுள் போடவில்லை
என்று..சொல்லி
சிரித்தது..!

எழுதியவர் : கருணா (8-Jan-15, 12:42 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 42

மேலே