வானவில்லாய் வளைந்து நிற்பவள்
ஊனாய் உயிராய் உலகமொழிக் குத்தாயாய்
தேனாய் பசும்பாலாய் தெள்ளமு தூட்டுவாள்
வானாய் நிலமாய் ஆதியில் வந்தவள்
விண்மீனாய் பிரசவித் தாள் .
தொல்காப்பியன் அகத்தியன் மைதனில் செழுமையாய்
வள்ளுவன் கம்பன் வாய்மையில் வெண்மையாய்
இளங்கோவடியின் சீத்தலையின் செல்லப் பிள்ளையாய்
உலகினிலே தொன்மைமிக்க மொழியானாள்
இன்னிசை வெண்பாவிலே இனிமை தந்து
இன்றும்கூட கன்னிப்போலே காட்சி அளித்து
எண்ணத்தை ஏட்டினிலே மிளிரச் செய்து
வண்ணம்தனை வானிலே வீசினாள்.
தாய்போலே தழுவி எனைக்கட்டிக் கொண்டால்
சேயாகி கைபிடித்து நடக்கப்பழகினேன் அவளை
வாயரா வாழ்த்தநானும் வந்திருக்கிறேன் தந்தை
தாய்மாரே பிழையிருப்பின் பொறுத்தருளும்..