துயிலேழை

பேய்,
நடனமாடும் மரம்,
இரத்தம் பீய்ச்சும்
இதய வால்வு,
பனித்துளி
தரைதொட்டுச் சிதறி
அதனோர்த் துளி
புல் பருகும் அற்புதக் காட்சி,
பல்லுருவாக்க நிலையில்
பனிமலையான ஒரு துளி,
உலகப்பந்தை யாரோ
எல்லைக்கு விரட்ட முனைகயில்
கடவுள் பிடித்துருளும்
விண்ணை தாண்டும் விளையாட்டு,
குரானும் கீதையும்
உயிர்பெற்று
மனிதா்களை திருத்த நடத்தும்
ஒரு வட்டமேசை மாநாடு,
மண்டையுடையாமல்
நான் நடக்கும்
ஆலங்கட்டி மழை,
என்னை கல் தூக்கச் செய்யும்
ஒரு தட்டான் பூச்சி,
மனிதவியல் பூங்காவை
பாா்வையிட நிற்கும்
மிருகங்கள்.
ஒரு தோ்ந்த
வரைகலை நிபுணராய்
கனவு.
--கனா காண்பவன்

எழுதியவர் : (8-Jan-15, 12:36 pm)
பார்வை : 51

மேலே