எத்தனை குடம் தண்ணீர் அடிப்பாய்

கணித ஆசிரியர் சொன்னார் நாம் எதையுமே வாழ்வியலோடு பொருத்தி பார்த்து கற்க வேண்டும். அப்போதுதான் அது மனதில் பதியும்.
ஒரு மாணவனை எழுப்பி உங்கள் வீட்டில் நல்ல தண்ணீர் குழாய் இருக்கிறதா என கேட்டார் . அவனும் ஆம் என்றான்.
நீ ஒரு நாளைக்கு இரண்டு குடம் தண்ணீர் அடிப்பதாக வைத்துக்கொள். அப்படியானால் ஒரு மாதத்துக்கு எத்தனை குடம் தண்ணீர் அடிப்பாய்.?
முப்பது குடம் சார் .
தம்பி நான் சொல்வதை நன்றாக கவனி. ஒரு நாளைக்கு இரண்டு குடம் அடிப்பதாகச் சொன்னேன். இப்ப சொல்.
அவன் மீண்டும் சொன்னான் முப்பது குடம் சார்.ஆசிரியர் சற்று கடுப்பாகி , சரி ஒரு நாளைக்கு ஒரு குடம் அடிப்பதாக வைத்துகொள்.இப்ப மாசத்துக்கு எத்தனை குடம் அடிப்பாய்.?
பதினைந்து குடம் சார்.
டேய் .. நீ தெரியாமத்தான் சொல்றியா ? அல்லது வேணுமின்னே சொல்றியா?
நான் தெரிஞ்சுதான் சார் சொல்றேன். நீங்கதான் தெரியாம கேக்குறீங்க.
என்னடா சொல்ற?
நல்ல தண்ணி குழாயில எங்க ஏரியால ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் தண்ணீர் வரும். நான் தெரிஞ்சுதான் சொல்றேன். நீங்கதான் தெரியாம கேக்குறீங்க.
இப்ப சொல்லுங்க சார். வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து நான் சொன்னது சரிதானே.

எழுதியவர் : ந.அலாவுதீன் (8-Jan-15, 8:06 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே