நாளைய தமிழும் தமிழரும் -பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி 2015

ஆண்டுகள் ஆயிரமுன் பிறந்தவள் -இவள்
மன்னர்கள் ,கவிஞர்கள், பலர்
மடியில் தவழ்ந்தவள் ..
சங்கம் பல கண்டு சரித்திரம் படைத்தவள் ...
வருடம் பல ஓடியும் மூபடையாத
கன்னியவள் நம் தமிழ்த் தாய் அவள் ..,

வலிகள் பல சுமந்தாலும்
வசந்தம் நாளை பிறக்கும் என
ஏங்கி வாழும் தமிழர்களை
தமிழ் என்ற உணர்வால் ஒன்றினைப்பவள் ,

நாளைய தமிழின் நிலையையும்
தமிழனின் நிலையையும் நம்மிடம்
தந்து நம்பிக்கைச்சுடர் ஏற்றி காத்திருப்பவள் ,

இத்தை திருநாளில் புதிய சபதம்
ஒன்று செய்திடுவோம் ..
ஆங்கில மூலாம் பூசாமல்
தாய்மொழியில் பேசி மகிழ்ந்திடுவோம் ,
பிறமொழியில் கற்பதைவிட
தாய்மொழியில் கற்று பெருமை கொள்வோம் ,
கடல்தாண்டி வாழ்ந்தாலும்
தமிழன் என்ற உணர்வு கொண்டு
தமிழர்களைக் காத்திடுவோம்
வெறும் பேச்சால் மட்டும்
தமிழன் ஏன்று உறைக்காமல்
நற்செயலாலும் தமிழன் ஏன்று உணர்த்திடுவோம் ...
என்றும்
உலக அரங்கில் தமிழையும்
தமிழனையும் தலைநிமிரச் செய்திடுவோம்..
என்றும் ...என்றென்றும் ..
..............
Intha padaippu enathu sontha padippu.

ஜீவன்மணி
19L. பிரணவம்
7th ward
Minnagar
Coutralam 627 811
9566840342

எழுதியவர் : jeevan (9-Jan-15, 12:18 am)
பார்வை : 181

மேலே