சர்வமும் நீயானாய் சகி

ச(க)ர்வமும் நீயானாய் சகி
=======================

சிநேகித்திருப்பேன் நின்னைநான்
ஏதுமில்லாதேயும்
நேரம் ஒர்க்காதேயும் வேர் தேடாதேயும்
ஆத்ம சங்கீதத்தின் அக்கரையில்
சென்றெத்தி
நானென்ற பாவத்திற்கு அப்புறமும்
இதோ சிநேகித்திருப்பேன் நின்னைநான்
நேருக்கு நேர் சகி,,,, !!!!
வசந்தம் இயற்கையை நிரப்புகையில்
வெறும் ஒரு பூவாய்,
நாம் காக்கும் இரகசியமாய்
திரண்ட புள்ளிச்சில்லைகள்போல்
முழங்குமென்
இதயத்துடிப்பின் பிரதிபலிப்பாய்
என் வரவிருக்கும் அறிவாயா சகி,,,!!!
காத்திருக்கையில்
குதிகால்களில் முளைத்திருந்த
காலவேர்களின் விருட்சத்தினால்
ஆவிநிறை மரமென
வீற்றிருக்கும் நின்னைக் காண
என் வரவிருக்கும் அறிவாயா சகி,,,,!!!
என்னுள் பிணைந்து மறைந்துள்ள
புருஷ ஜென்மங்களும் மிகுந்து
நதிபோலே
உன் சிறைக்கால ஜுரம் தீர்க்க
காலம் பதித்திருந்த
கோரநளின சமுத்திரத்தில் இருந்து
நீந்தித்திரும்பி நான்
என் புருஷ வம்சத்தை முழுவதுமாய்
முத்தமிட்டு உடுத்தி நான்
நின்னைக் காண
என் வரவிருக்கும் அறிவாயா சகி
உன் பார்வை அகல
அதோ நீ காணும் தொலைவில்
நின்னைக்காண
என் வரவிருக்கும் அறிவாயா சகி,,,!!!
உனக்குள்ளே முளைத்தும் பாடியும்
நானிருக்கின்ற பட்சத்தில்
உன்னில் ஒன்றாகும்
யுத்தமும், வேகமும், தூரமும் எல்லாமே
ஆழியும் காலமும்போல
எனக்குள் ச(க)ர்வமும் நீயானாய் சகி

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (9-Jan-15, 5:06 am)
பார்வை : 106

மேலே