வாலி உயிர்க்கின்றான்

*.மொட்டைமாடித் தரைத்
தேய்ந்து போய் விட்டது
உனை எண்ணி நடந்து நடந்து...

*.குளத்தோடு கண்ணீரை
கசக்கும் தாமரைகள்
உன் கூந்தல் குடியேராமல்...

*.சூடான வணாலியிலும்
நீந்திடும் மீன்கள் – நீ
வருத்திடும் பொழுதினில்...

*.உன் தோட்டத்துப் பூக்களும்
உன்னை போல மென்மையாகின்றன
நீ வெளிவிடும் காற்றை சுவாசிப்பதால்...

*.மேகக் கூட்டங்கள் இனி
மெல்லத்தான் நகர வேண்டும் – நீ
தூங்கும் வேளையில் ஓசைகள் எழுப்பாமல்...

*.மழைக் காலங்களில்
இடிகளும் மெளனமாகின்றன
உன் கொலுசொலிக்கு மறுமொழிக் கூறமுடியாமல்...

*.எதிர் வீட்டைக் காட்டிலும்
எழிலோவியம் மிக்கதுதான் – என்றோ
நீ எழுப்பும் உன் வாசல் கோலங்கள்...

*.என்னிலும் ஒரு வாலி உயிர்க்கின்றான்
உன்னை என்னும் போது
என்னை அறியாமல்...

எழுதியவர் : அவா கவி (9-Jan-15, 3:24 pm)
பார்வை : 91

மேலே