கண்ணாடி முன்னாடி நான் நிக்குறேன்
கண்ணாடி முன்னாடி நான் நிக்குறேன்...
கையாலே தலவாரிதான் கலைக்குறேன்...
சட்டைய மடி, சைக்கிள மிதி...
ஒன்னொன்ன மாறுறேன் உன்னால...
உள்ளுக்குள் எல்லாமே நீதானே...
பாதையில் நீ வந்தா நான் இருப்பேன்...
பக்கத்தில் நீ வந்து முகம் சுழிப்ப...
பொல்லாத வீரன்டி நான்தான் பொண்ணே...
கைய கட்டித்தான் நிக்குறேன் உந்தன் முன்னே...
எதிரில் நான்தானே நடந்திட்டா,
என்ன எதிரி போலதான் பாக்குற...
பின்ன, தொடர்ந்து நானும்தான் நடக்கையில்
உள்ள சிரிச்சு போகுற...
மானே மயிலே மெல்ல மெல்ல...
மதுரமல்லி உன்னப்போல இல்ல...
கண்ணே முத்தே வெள்ளி மீனே...
காத்துக்கிடக்கேன் எதையோ சொல்லத்தானே...
தூங்காம ஊரையே சுத்திக்கிடந்தேன்...
இப்ப தூக்கத்தில் உன்னையே சுத்திக்கிடக்கேன்...
சிம்மக்கல் கோவிலாய் நீ நிக்குற...
இந்த பித்தனை சித்தனாய் நீ மாத்துற...
சிறு பிள்ளை பேச்சேல்லாம் நீ கேக்குற..
நிதம் நினப்போடு கலந்துத்தான் நீ வாழுற...
சித்திரப் பண்டிகை மீனாட்சிப் போல்
உன்ன புத்தியில் பல்லாக்கு நான் துக்குறேன்...
கருவேலமரத்தோடு நீ பேசுற...
தல குனியாம நிமிராம நீ போகுற...
சொல்ல முடியாத அழகான ராசாத்தியே...
சொக்கி விழுந்திட்டேன் மயங்கித்தான் ரோசத்தீவே...
காதல எழுதி நான் தரட்டா?
பதில் வார்த்தைய யோசிச்சு சொல்லடி...
இந்த பால் மனசத்தான் நான் எழுதுறேன்...
அத பாட்டா மாத்தி நீ பாடடி...