35 ஒரு செய்திக் கவிதை
கணவனின் வேலை அடிக்கடி வெளியூர்!
கள்ளப் புருசனைத் தேடினாள் மனைவி!
கண்ணுக் கழகாய்க் கட்டிளங் காளை
சிக்கினான் ஒருவன் பணிசெயும் இடத்தில்!
வீட்டில்,
மாமனார் இல்லை; மாமியார் மட்டுமே!
மாமியா ருக்கும் மாலைக் கண்நோய்!
வசதியாய்ப் போனது வாலிபத் தினவுக்கு!
வீட்டிற்கே அழைத்து விருந்து கொடுத்தாள்!
கண்தான் குருடு; கருத்துமா குருடு?
கண்டு பிடித்துக் கத்தினாள் கிழவி!
'புருஷன் வந்தால் போட்டுடைத் திடுவாள்!
போகும் மானம்! போகும் உயிரும்!
வருவதற் குள்ளே முந்திக் கொள்வோம்!
இன்றே முடிப்போம் இவளின் கதையை!
நடுச்சா மத்தில் நடுங்காமல் வருக!'
- கள்ளப் புருஷன் காதில் ஓதினாள்!
இப்புறம் இவளும் அப்புறம் அவனும்
குப்புறக் கிடந்த கிழவியின் தலையில்
தலையணை வைத்துத் தரையொடு தரையாய்ச்
சேர்த்து அமுக்கினர்; சேர்ந்தாள் கிழவி!