பாதணியின் இலக்கம் பதியும்

************************************
************************************
மேன்மையான பிறப்புக்கள் எல்லாம்
காலத்தை ஆளுகின்ற மானிடர்களின்
கேடுகளால் மிக எளிமையாக
அழிந்து போக ~~~~~~~~~~~~~~~~~~~~~!
மென்மையை உணர்த்தும்
பெண்மையின் உவகை
அண்டம் வாழ் நல்லுரை கூறும்
மக்கள் மத்தியில்~~~~~~~~~~~~~~~~~~!
ஈடு இணையாக ஒப்பனை
செய்கின்றது ஒளடதங்கள்
இல்லாமல் காயங்களை ஆற்றி ~~~~~!
கலக்கமான வாழ்க்கையில்
களங்கம் இல்லா பெண்மைகள்
கம்புளிப் பூச்சியாய் சுருண்டு கிடக்கிறது
கற்பு எனும் சூர வேட்டையினால்~~~~~!
ஓரம் பேசுகின்ற நாலு பேரும்
ஒன்றிணைந்தால் வன்முறையும்
ஒடுங்கிவிடும் புறம் கூறுவதால் ~~~~~~!
வீதியிலே சென்றால் -தன்
விளையாட்டுக்கு பீதியைக்
கிளப்புகின்ற ஆணே !!!
தெருவிலே செல்லும்
தேவியினை சீண்டிப் பார்க்கும்
பாம்பாட்டி உன் மகுடிக்கு
மயங்கும் பெண் நாகம் நானல்ல ~~~~~!
பல நாள் கண்காணித்து
ஒரு நாள் அறை வாங்கும் பாம்பாட்டியே !
பெண்கள் ஒன்றும் இன்று
சாதாரணப் பெண் இல்லை
பாரதி காணாமல் போன
நவீன காலத்து புதுமை பெண் !
என் ரேகை உன் கன்னங்களில்
பதியும் முன்னர் -என்
பாதணிகளின் இலக்கம் பதிந்து விடும்
கன்னங்களில் பலியான காணிக்கையாய் ~~!
தெருவினிலே பெண்களை
வரம்பு மீறி நீ சீண்டினால்
உள்ளம் தளர்ந்து போகமாட்டாள்
:நவீன கால புதுமை பெண் :
என்னைப் போல கன்னங்களில்
பதித்து விடுவாள் தன் வாக்கினை