36 வாழ்க்கை
முடிச்சுகள் நிறைந்த வாழ்க்கையடா!
*** முயற்சிகள் நிறைந்த வாழ்க்கையடா!
தடுப்புகள் தாண்டி வந்துவிட்டால்
*** தயாராய் இருக்குது கோட்டையடா!
ஆழங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையடா!
காலங்கள் வரும்வரை காத்திருந்தால்
*** கனிகள் உதிர்க்கும் தோட்டமடா!
கர்மங்கள் தொலையும் வாழ்க்கையடா!
*** கஷ்டங்கள் சூழும் வாழ்க்கையடா!
தர்மங்கள் எதுவெனத் தெரிந்துகொண்டால்
*** தாகம் தணிக்கும் தீர்த்தமடா!
வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** வலிகள் மிகுந்த வாழ்க்கையடா!
திருத்தங்கள் உள்ளே செய்துகொண்டால்
*** திருப்பங்கள் காட்டும் வாழ்க்கையடா!
குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** கொடுமைகள் மிகுந்த வாழ்க்கையடா!
இழப்புகள் மீறி எழுந்துநின்றால்
*** இமயமும் சாய்ந்து தோற்குமடா!