சொல்வது சுலபம்

எழுதுவதற்க்கு எப்போதும் நல்ல காரணம் இருக்க வேண்டும்
அது ஆழ் மனதில் தங்கிவிட்ட வலியாயிருக்கலாம்
யார்மீதேனும் கொண்ட வெறுப்பாயிருக்கலாம்
அதுவே நெஞ்சில் கிளற்தெழும் மகிழ்ச்சியாயிருந்தால்
நீங்கள் தாமதிக்க கூடாது. அதன் ஆயுல் மிக மிக குறைவே.
இரவின் தனிமையும், நிலவின் ஒளியும், நட்சத்திரங்களின் ஜொலிப்பும்
கவிதை கொடுக்கும் என்றென்னினால்
பிழையில்லை, முயற்சித்துப்பாருங்கள்.
நீங்களும் உலகமும் தொடர்புலிருப்பது முக்கியம்.
காகிதம் வெறுமையாய் பல மணிநேரம் இருந்தால்
அதில் வரைய துவங்குங்கள். அது ‘ந’ என்று ஆரம்பித்து
மூக்கு கால்களுடன் முடியும் காகமாயிருந்தாலும் பரவாயில்லை
மறக்காமல் சூரியானிடம் ஒரு சண்டையிட்டுவிடுங்கள்.
சில எழுத்துக்கள் கவிதைகளை போல் போதையளிப்பவையில்லை.
அவற்றை காட்டு விலங்கை பணியவைக்கும் சர்க்ஸ்காரனின் உத்தியுடன் அனுகவேண்டும்.
சில நேரம் உணவிட்டோ, சாட்டையால் அடித்தோ,
மின்கொம்பினால் அதிற்வூட்டியோ வழிக்கு கொண்டு வந்துவிடலாம்.
இதில் மிக முக்கியம் நீங்கள் தான்.

எழுதியவர் : பூவிளங்கோதை (10-Jan-15, 1:18 am)
சேர்த்தது : பூவிளங்கோதை
Tanglish : solvadhu sulapam
பார்வை : 438

மேலே