இவர்தம் மலக்கரம் எது

..."" இவர்தம் மலக்கரம் எது !!?? ""...

சமூக அவலங்களிலே
வீசிடும் துர்நாற்றத்தால்
கழிவின் நாற்றமிவனுக்கு
பெரிதாய் தெரியவில்லை !!!

வேலையிலே நிறுத்தம்
இவர்கள் செய்துவிட்டால்
வீட்டினில் நாம் சுகமாய்
இருந்திடவே முடியா !!!

முன்னோர் சொல்லிவிட்ட
சுத்தமே சோறுபோடும்
என்றந்த பழமொழியோ
இவருக்கே பொருந்திடும் !!!

இடக்கரம் வலக்கரமென்று
தனித்தனியாய் வேலைகளை
பிரித்து வைத்தே செயல்பாடு
சிந்தையுள்ள மானிடா !!!

சிரிக்கின்ற முகத்தோடு
சிரமங்களை பார்க்காதே
செயல்படும் வேகத்திலே
இவர்தம் மலக்கரம் எது !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (10-Jan-15, 12:57 pm)
பார்வை : 81

மேலே