உடனே வந்து விடு நீ
உலியால் உன்னை
நான் செதுக்கியதால்
வலியால் துடிக்கிறது
என் உள்ளம்..
உன்னால் நான்
உருகி. மெழுகாய்
உன்னை வடித்து
உயிராய் நீ எனக்குள்.
உண்மையாய் உன்னை
நான் சுவாசித்து
கவிதையாய் நீ எனக்குள்
வாழ்கிறாய் கற்பனையில்..
உடலும் உடலும்
உறசிடவே. உன்னை
வேண்டும் எனக்கு
உடனே வந்து விடு நீ.