காதல் பைத்தியம்

பத்துத்திங்கள் பாதுகாத்த என்அம்மாவை விட
பாதை தெரியாத இடத்திற்கு வழிதுணையாய் நின்ற என்அப்பாவை விட
அறியாத வயதிலிருந்து அனைத்தையும் அறிந்த என்தோழியை விட
இத்தனை நாளாய்,
முகம் தெரியாத,
முகவரியும் தெரியாமல் இருந்த நீ !!
இன்று .....
எந்தன் நிழலை போல்,
எந்தன் இதயத்துடிப்பைப் போல்,
எந்தன் சுவாசக் காற்றைப் போல்,
எந்தன் எது என்று சொல்லமுடியாமல் ,
என்னுள்ளே ....
என்னோடு ஒன்றி ,
நீ நானாக மாறி வருவதை அறியாத பலர்
என்னவென்று கேட்க ,
பதில் சொல்லத்தெரியாமல் சிறு புன்னகை சிந்தினால்
என்னை "காதல் பைத்தியம் " என்கின்றனர் பைத்தியங்கள்.......

எழுதியவர் : sudarvizhi (10-Jan-15, 1:20 pm)
Tanglish : kaadhal paithiyam
பார்வை : 179

மேலே