இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப்போட்டி 2015

இயந்திரமயமான வீதியோரத்தில்
தரைநோக்கி நானும் நடக்கையில்
என்னை முட்டிச் சென்றது ஒரு மானிடம்
துடிதுடித்து விட்டேன் அக்கணமே...!


சீறி சினத்து திரும்புகையில்
சிலிர்த்து நின்றேன் உன் புன்னகையில்
அறைந்திட நினைத்தவள் மதிமயங்கிட
மன்னிப்பு கேட்டு மனதிற்குள் நுழைந்தாய்...!


மோதலின் முடிவு தெரிந்ததுவே
நாங்கள் மட்டும் விதிவிலக்கா
நம்மை நாம் தெரிந்து கொண்டதால்
வாழ்வை ரசித்திட ஒரு விதி செய்தோம்...!


பார்வையற்ற உனக்குள்
என்விழி ஒளியாகி
நிசப்தமான என் நாவில்
உன் குரல் ஒலியாகி...!

ஊனோடு ஊன் கலந்து
உலகம் மறந்து
உள்ளம் நிறைந்து
பிரபஞ்சம் முடியும் வரை
இப்படியே காதலிப்போம்...!!!



--------------------------------------------------------------------------
இந்த படைப்பு என்னால் படைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.


மணிவாசன் வாசன்,

வயது - 32

வதிவிடம் -
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

தொலைபேசி இலக்கம். +94719391569

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (10-Jan-15, 1:40 pm)
பார்வை : 149

மேலே