இப்படி நாம் காதலிப்போம் -“பொங்கல் கவிதை போட்டி 2015”

எப்படி நாம் காதலிப்போம்?
எந்தையும் தாயும் இழந்து
மந்தையும் சந்தையும் அழிந்து-நம்
இனம் அழிய கண்டபின்னே
எப்படி நாம் காதலிப்போம்?
குதித்து நாம் ஓடிய இடமெல்லாம்
குருதியை கண்டபின்னும்!
திரும்பிய திசையெல்லாம்? சிதறிய சடலங்கள் கண்டபின்னும்!
திக்கற்று நிற்கின்ற குழந்தையை கண்டபின்னும்!
எப்படி நாம் காதலிப்போம்? எப்படி நாம் காதலிப்போம்?
இப்படி ஏன் பேதலித்தோம்?
இல்லை இல்லை- காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம்
விழ வைத்த என் இனத்தை
எழ வைக்க காதலிப்போம்
சிறுபான்மை என்ற நம்மை
பெரும்பான்மை ஆக்கிட நாம் காதலிப்போம்
காதல் வீட்டினுள்ளே குறிக்கோளே இல்லாமல்
காமத்தை தேடி வரும் கள்வனாய் இல்லாமல்
கானகத்தை காத்திட நாம் காதலிப்போம்
சோகத்தை மறந்து துரோகத்தை மறந்து
நம்மை பெற்ற காதலுக்காய்
நமக்காக காதலிப்போம் நம் உறவுக்காய் காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம்!!! உறவுகளே இப்படி நாம் காதலிப்போம்!!!.....
================================================================================================
இது எனது படைப்பு இந்த படைப்புக்கு நானே உரிமையாளர் என உறுதியளிக்கிறேன்
================================================================================================
நே.தினேஷ்,
வயது = 26,
51/16 C சுப்பையா முதலியார் புரம்,
2வது தெரு,
தூத்துக்குடி -628003,
இந்தியா.
91-8754174477

எழுதியவர் : நே.தினேஷ் (10-Jan-15, 3:04 pm)
பார்வை : 89

மேலே