எல்லாம் உன்னால்

நிலத்தை உழுதேன் உன்னால்
உன்னை உழ போவது என்நாள்
உறுதியாய் சொல்லி விடு நன்நாள்
காத்திருக்கிறேன் இன்நாள்...
முடியவில்லை என்னால்
முடித்து விடு உன்னால்
முதுமை வரும் முன்னால்
முடிவாய் சொல்லி விடு கண்ணால்...
கவி எழுத முடியவில்லை என்னால்
காத்திருக்கவும் முடியவில்லை என்னால்
கருணை காட்ட முடியுமா? உன்னால்
கண் மூடும் முன்னாள்..
கட்டி அணைத்திடவே
கட்டிலும் ஆடிடவே
கரும்பாய் இனித்திடவே
கனியாய் வந்து விடு.