சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப் போட்டி 2015
சாதி பார்ப்பவனின் சமவெளியில் ஒரு நாள்..
கண்விழித்து பல்துலக்க பற்பசை எடுத்தான்
இதை செய்தவன் வேறு சாதியாக இருந்தால்...
முகம் கழுவ சவர்க்காரம் எடுத்தான்
இதை செய்தவன் வேறு மதமாக இருந்தால்...
உடை மாற்றும் போதும் இதே சிந்தனை...
உணவு உண்ண அமரும் போதும் இதே சிந்தனை...
பல் துலக்காமல் முகம் கழுவாமல் உணவு உண்ணாமல்
உடைகளின்றி பசியுடன் பேருந்தில்
அட.. இந்த பேருந்து எந்த சாதிக்காரனுடையது என்று வீம்பாக...
எல்லோருக்கும் முன்னே அவமானமாய்..
மானம் போனாலும்
சாதி மதம் பார்த்துவந்தான்....
தேவையில்லாத இதையெல்லாம்
குழி தோண்டி புதைத்து விட்டு சாதிக்கப்பாரு...
இன்று உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும்
உனக்காக உழைப்போரின் வியர்வையையும்
திறமையையும் மட்டும் பாரு
சாதி மதம் பார்க்காதே
பூக்களும்,விலங்குகளும், நீரும், நிலமும்
வானும், நிலவும், நாளும், பொழுதும்
நம்மைப்போல சாதி மதம் பார்க்க ஆரம்பித்து விட்டால்
நமக்கு வாழ இந்த பூமி இல்லை...
மனித இனம் மட்டுமே பூமிக்குத் தொல்லை....