இனிக்கும் இளமை

இனிக்கும் இளமை

வீடு கசக்கும்
வீதி இனிக்கும்
பருவம் !

எதையும் செய்திட
எதையும் வென்றிட
துடிக்கும் பருவம் !

கடந்ததையும்
கடக்கப் போவதையும்
எதிர்கொள்ளும் பருவம் !

சுகங்களையும்
சுமைகளையும்
தாங்கும் பருவம் !

பயன்படுத்தவும்
பண்படுத்தவும்
தகுந்த பருவம் !

அனுமதியுண்டு நீ குனிந்து வந்தால்
அடியுண்டு நீ நிமிர்ந்து வந்தால்
என கற்றுத்தரும் பருவம் !

முயற்சியின் மறு உருவமடா
முன்னேற்றத்தின் முதல் படியடா
நீ கொண்ட இளமை பருவமடா !

உலகை நீ என்றும் பார்க்கலாம் மழலையாய்
உன்னை என்றும் உலகம் பார்க்கட்டும் இளமையாய் !

எழுதியவர் : லியா (10-Jan-15, 7:14 pm)
Tanglish : inikkum ilamai
பார்வை : 349

மேலே