அம்மா அம்மா

அனைத்தையு மறிந்தவள் ,
அன்புக் கடையாளமிவள் ;
அழகுக்கு ஆழம்காணாதவள் -
அழுகைக்கு ஆழ்கடலிவள் ..!

"அ" என்ற தவிப்பும் ,
"ம்" என்ற துடிப்பும் ;
"மா" என்ற வலியும் -
அனைத்தும் சேருமுருவாக ..

"அம்மா" என்று வந்ததடி ,
"அன்னை-மகவு" ஈருயிராய்..
ஐயிரண்டு திங்களிலே -
அடைகாத்த உறவொன்று..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (10-Jan-15, 9:32 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 260

மேலே