மங்கையராய் பிறந்திட மா தவம் செய்திட வேண்டும் அம்மா

அன்பை அன்பால் அன்பாக உணர்த்துவதற்காக படைக்கப்பட்டவள் பெண். மிருதுவான பெண்மை இரும்பை விட வலிமையானது. . பெண்மை மகத்துவம் வாய்ந்தது. வலிமையானது. முழுமையானது. ஒரு மந்திரியின் புத்தி கூர்மை பெண்ணிடம் உண்டு. பிற் காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை முன்பே உணரும் ஒரு சக்தி உண்டு.

தற்காலத்து பெண்கள் தங்களது புற தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுதுவதர்க்காக பல விதமான அலங்காரங்களையும் அணிகலகன்களையும் விரும்பிகின்றனர். ஒரு சில மணித்துளிகள் தங்களது அக தோற்றத்திற்காக பின் வரும் சுய கட்டளைகளை மனதில் ஏற்றி செயல்பட்டால் வாழ்க்கையில் ஒரு நிறைவை பெறலாம் .

* எந்த ஒரு சூழ்நிலையையும் என்னால் கையாள முடியும் .
* என்னுடைய தன்னம்பிக்கையை ஒரு போதும் குலைய விட மாட்டேன்.
* நான் சாதிக்க பிறந்தவள். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணம் .
* சூழ்நிலைகள் என்னிடம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது .
* என்னுடைய வலிமையை கண்டிப்பாக பிறர் உணரும் படி செய்வேன்.
* கவலைகளை தகர்த்து நேர்மையான எண்ணங்களை வளர்த்து அமைதியான முறையில் முழுமை அடைவேன்.
* நான் ஒரு உதாரண பெண்ணாக திகழ்வேன் .

அன்பை அன்பால் உணர்த்தி
அளவுகோலால் மதிப்பிட முடியாத பெண்மை

இன்னல்களை இதயத்தில் சுமந்து
இனிமையான வாழ்க்கையை தருபவள்.

ஏட்டு சுவடியாய் இருந்தாலும்
எட்டாத உயரத்திற்கு நம்மை எற்றுபவள்.

பிறருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து
பிறர் மனம் மலர்ச்சி அடைய தியாக மழை பொழிபவள்.

காலை முதல் இரவு வரை
காற்றாடி போல சுழலும் பெண்ணின்

சுமைகளை சுவையாய் மாற்றிட
நாம் செய்ய போகும் பிரதிபலன் தான் என்ன ?

பெண்களிடம் உள்ள நற்குணங்களை நேசிப்போம் . அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகத்தை ஏற்படுத்தி திறமைகளை பாராட்டி தன்னம்பிக்கையை ஊட்டுவோம் !

24 மணி நேரமும் பிறருக்காக கடிகாரம் போல ஓடும் பெண்மைக்கு நாம் பேட்டரியாய் செயல் படுவோம் !


==கிருபா கணேஷ் ==

எழுதியவர் : kirupaganesh (10-Jan-15, 11:13 pm)
பார்வை : 345

மேலே