மேலிருந்து தொடங்குதல்

வெற்றியின் வழிமுறைகள் - 1
============================

தாடியில் வெண் மயிர்கள் காணப்பட்ட ஒரு மனிதன் ரெக்ரூட்டிங் ஆபிசுக்கு போனான் .

"என்னை ஓர் இராணுவ வீரனாக சேர்த்துக் கொள்ளுங்கள் " என்று அவன் கேட்டுக் கொண்டான் .

" உனக்கு என்ன வயதாகிறது ?" என்று சார்ஜன்ட் கேட்டார் .

" அறுபத்தி இரண்டு "

" இராணுவ வீரனாவதற்கு அறுபத்தி இரண்டு வயது மிகவும் அதிகம் என்று உனக்கு நன்றாக தெரியும் தானே ! " என்று சார்ஜன்ட் கேட்டார் .

" இராணுவ வீரனாவதற்கு இந்த வயது அதிகமாக இருக்கலாம் . ஆனால் உங்களுக்கு ஒரு ஜெனரல் தேவை இல்லையா ? " என்று அவன் திருப்பிக் கேட்டான் .

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் (மே 1982) மேற்படி சம்பவம் வெளிவந்திருந்தது . அதற்க்கு வேடிக்கையான ஒரு தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தது

"மேலிருந்து தொடங்குதல் "(starting at the top) என்பதே அது .

ஒருவன் ஜெனரல் பதவியிலிருந்து தனது இராணுவ வாழ்க்கையை தொடர விரும்பினால் , அது ஒரு போதும் சாத்தியமில்லை . இது பொது வாழ்க்கைக்குரிய ஒரு விவகாரம் . இங்கே யாருக்கும் பல்டியடிக்க முடியாது . ஒரு மரத்தின் தொடக்கம் எவ்வாறு விதையிலிருந்து ஆரம்பமாகிறதோ , அதே போன்றே வாழ்க்கையை கட்டி எழுப்புவதன் தொடக்கமும் ஆரம்ப புள்ளியிலிருந்து அல்லது வேரிலிருந்து தான் ஆரம்பமாகிறது. இறுதிப்புள்ளி அல்லது உச்சியிலிருந்து உங்களுக்கு உங்களது வாழ்க்கையை தொடங்க முடியாது .

வியாபாரம் மூலதனத்தை இடுவதிலிருந்து ஆரம்பமாகின்றதேயன்றி , இலாபம் ஈட்டுவதிலிருந்தல்ல . உணவு உண்பதன் தொடக்கம் வயலில் விதை தூவுதலிருந்தன்றி , மேசையில் பீங்கானை சோடித்து வைப்பதிலிருந்தல்ல.
தொழிற்சாலையின் தொடக்கம் இயந்திரங்களைப் பெறுவதிலிருந்து ,தயாரான பொருட்களை சந்தைப்படுத்துவதிலிருந்தல்ல .....

இதே போன்று , சமூக விவகாரங்களின் தொடக்கம் இலட்சியத்தை இனங்கானுவதிலும் , விருப்பத்தை தூண்டுவதிலிருந்தும் தான் ஆரம்பமாகின்றது . மனிதர்கள் முயற்சியுடையவர்கலாகவும
நேர்மையானவர்களாகவும் மாற்றப்பட வேண்டும் . அவர்களிடம் சகிப்புத்தன்மையும் ஒற்றுமையும் ஏற்படுத்த வேண்டும் . மனிதர்களிடம் இந்த தகைமையை போதியளவு உண்டு பண்ணுவதற்கு முன்னர் நடைமுறை சார்ந்த விடயங்களில் இறங்கினால் அது தோல்வியிலே சென்று முடியும் . அத்தகைய சமூக நிர்மாணம் சுவர் எழுப்புவதற்கு முன்னர் கூரை போடுவதைப் போன்றது . அந்தக் கூரை அதனை தூக்குபவர்களின் தலையிலேயே விழுந்து விடும் . இதே போன்று , மனிதர்களை உருவாக்க முன்னர் சமூகத்தை உருவாக்குவது தோல்வியிலும் அழிவிலுமே சென்று முடியும் .

எழுதியவர் : fasrina (11-Jan-15, 10:48 am)
சேர்த்தது : fasrina
பார்வை : 108

மேலே