“பொங்கல் கவிதைப்போட்டி 2015” - சாதி ஒழி மதம் அழி சாதி
“பொங்கல் கவிதைப்போட்டி 2015”
சாதி ஒழி! மதம் அழி! சாதி
---------------------------------------
சாதிகள் இல்லாச் சமுதாயம்
சாத்தியம் என்று தோன்றவில்லை
மதங்கள் மறையும் காலம் ஒன்று
மலரும் என்று நினைக்கவில்லை
பள்ளம் மேடும் உள்ளது தான்
பாரினில் நாடென்று காண்கின்றோம்
நிலமது சமநிலை என்றிருந்தால்
நீர்நிலை அதனின் நிலையென்ன
உயரத்தில் வாழும் நல்லவனை
தாழ்ந்தவன் உயர்த்தி பேசட்டுமே
தாழ்ந்து கிடக்கும் மகன் அவனை
உயர்ந்தவன் தூக்கி நிறுத்தட்டுமே
சாதி என்பது ஒரு குறியே
மதம் என்பதும் ஒரு பெயரே
உடலில் ரத்தம் ஒரு நிறமே
உயிரும் வலியும் ஒன்று தானே
சாதியும் மதமும் இருக்கட்டும்
சார்ந்து வாழ்ந்து சாதிப்போம்
மனிதம் ஒரு நாள் உயிர் பெற்றெழும்
மதமும் சாதியும் பிணம் போல் வாழும்.
-----------
சுரேஷ் ஸ்ரீனிவாசன்
14/1 பாரத் நகர்
அங்கம்மாள் லேஅவுட் அருகில்
நீலிக்கோணம்பாளயம்
கோவை 641033
வயது 49
போன் 9843597414
இது என் சொந்த படைப்பு என்று உறுதியளிக்கிறேன்