துணிவே துணை
அடர்ந்த காட்டு பயணம் -
அதிலேமிரட்டும் அகோர உருவம்
கொடிய பற்கள் கூறிய நகங்கள்
கொலை செய்ய துரத்தும் நடுநிசி நேரம் ...........
அழைத்திட உறவுகள் ஆயிரம் இருந்தும்
அவரவர் ஓடி ஒலிந்தநேரம்
நடுத்தெரு வீதியில் நாதியற்று
அழுது புலம்பும் ஆபத்து காலம் ............
கைகள் அதனில் ஆயுதமில்லை
கலங்கி நிற்க கோழையுமில்லை
இரண்டில் ஒன்றை பார்க்க துணிந்து
இதயம் அதிலே துணிவு கொண்டேன் ..........
துணிவு கொண்டு எதிர்த்து நின்றேன்
துணிச்சலோடு பகைத்து நின்றேன்
மிரட்டி வந்த மிருகம் அதுவே
மிரண்டு ஓடும் நிலையை கண்டேன் ...........
வாழ்க்கை என்னும் நெடிய பயணம்
மிரட்டி பார்க்கும் துன்ப மிருகம்
பணிந்து போனால் பாடை தானே
துணித்து வாழ்ந்தால் வெற்றி தானே ...........
எவரின் வாழ்வில் இதுவும் வரலாம்
துணிவு கொண்டால் இனிமை பெறலாம்
வாழ்க்கை என்பது வாழத்தானே
வாழ்ந்து பாரு இன்பம் தானே ............