முட்டாள் மனசு

ஒன்றை இழந்துவிட்ட பின்புதானே
ஓலமிட ஆரம்பிக்கின்றன
அந்த ஞாபகங்கள்...

ஒன்றை கடந்துவிட்ட பின்புதானே
நம்மை அலைகழிக்கின்றன
அந்த நிமிடங்கள்...

முட்டாள் மனசு,

ஆயிரமாயிரம் ஆசைகள் இருந்தும்
அருகிருந்து காட்டமுடியாத தருணங்கள் எல்லாம்
கத்தி பிடித்து குத்துகின்றனவே
கைவிட்டு போனபின்பு.

நட்பாகட்டும்...
காதலாகட்டும்...

நினைக்கையில் ஏன்
நெஞ்சம் கனத்துப் போகிறது?

கோழை இதயத்தை
கொன்று போடலாமா என்ன?

கரைதட்டி நிற்க்கும் படகாய்...

நிஜத்தில் நிர்க்கதியாய் நிற்ப்பது
நாம் மட்டும்தானே.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (11-Jan-15, 12:09 am)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
Tanglish : muttal manasu
பார்வை : 73

மேலே