இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப் போட்டி 2015

ஆசைக் கிளியடிநீ - கண்ணம்மா
---ஆரிதை மறுத்துரைப்பார் !- எந்தன்
மீசை மேலமர்ந்த - எழில்
---மயிலதின் பீலிநீயே ! - உன்மேல்
நேசம் விளைத்தல்விட - வேறு
---நிகழ்வென்ன செய்துவிட்டேன் ! - நீயும்
பேச மறுத்துவிட்டு - வாயெனும்
---பேழையை மூடிவிட்டாய் !

பேச்சுரை மறுத்துவிட்டாய் - நெஞ்சில்
---பேரிடி மின்னல் ! என - பல
வீச்சு நடக்குதடி - மனமும்
---வீங்கி வெடிக்குதடி ! - காதல்
பூச்சரம் தன்னையும்நாம் - சேர்ந்து
---பூமியிற் கட்டுகையில் ! - கொஞ்சம்
தீச்சுடர் புரட்சிபற்றி - வாய்
---திறந்ததனால் சினமோ ?

மாதர் தமையழிக்கும் - அந்த
---மடமை கொளுத்துதற்கு ! - நம்
காதல் எனும்சுடரை - கொஞ்சம்
---காட்டி நகர்வருவோம் ! - பல
வேதனை குறைத்துவிட்டால் - காதல்
---வெல்வது சத்தியமே ! - அடி
ஈதென்றன் யோசனைகள் - வா!நாம்
---இப்படிக் காதலிப்போம் !

_________________________________________________________________________________________
நானே இந்தக் கவிதையின் முழு உரிமையாளர் என்று உறுதிகூறுகிறேன்.
பெயர் : விவேக்பாரதி
வயது : பதினாறு
வதிவிடம் : திருச்சி
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : 9750588007

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (11-Jan-15, 1:15 pm)
பார்வை : 218

மேலே