குளமோ கரையேருது - பூவிதழ்
கரும்பு கடிக்க பல்லுமில்ல
மஞ்சள் கட்ட மண்பானை இல்லை
உழுது களைச்சமாடுமில்ல
உதாரணம் காட்ட கூட ஒருகழப்ப இல்ல
நெல்லு வெளஞ்ச வயலெல்லாம்
கல்லு முளைச்சு நிக்குது
குளமெல்லாம் நீர்நிரப்பி
ஊரெல்லாம் பயிர் வளர்த்தோம் இப்ப
குளமெல்லாம் மண் நிரப்பி
ஊரே குடியேருது
குளமோ கரையேருது
உருப்படியா ஏதுமில்ல
உரக்க சொல்ல யாருமில்ல
குக்கருல வச்ச பொங்கபோல
குமுறுது எம்மனசு
போகியோடு சேர்த்து கொளுதிபுட்டோம்
உழவனையும் வருங்கலத்தில் பொங்கலையும் !