மண்
இன்று..
நீ..
மிதிக்க படலாம்..
எத்தனையோ பேர்களைப் போல..
உன்னை மிதியடி மண் என்று
சிலர் எடுத்து ..
ஒற்றிக் கொள்ளக் கூடும்..
சிலர்..
உதறி போகவும் கூடும்..
வானத்து சந்திரனில்
இருந்து
எடுத்து வரப்பட்ட
மண் என்றாலும் கூட ..
வித்தியாசத்தை அறியாதவன்..
விபரம் தெரியாதவன்..
மிதிப்பதனால்..
வித்தியாசங்கள்..
எதுவும் உனக்கில்லை..!
குயவனின் கையில்..
நீ உரு மாறி
உபயோகப் பொருளாகிறாய்..
..
வீடு கட்டுபவனின்
கைகளில் குழைந்து
சாந்தாகி..
கட்டிடம் ஆகிறாய்..!
உன்னை வாரி
தூற்ற நினைக்கும்
வயிற்றெரிச்சலுக்கு..
துணை ஆகிறாய் !
இறுமாப்பு மனிதரும்..
அது இல்லாதரும்
சமமென..
இறுதியில் எரிவதற்கு முன் ..
மேலுடம்பில்
பூசப்படும் திரை ஆகிறாய்!
முகத்தை மூடும் பிடி
மண்ணாகவும் ஆகிறாய்..!
வித்தியாசங்கள்..
உனக்கு இல்லை..
எப்போதும்!